Breaking News

உங்ககிட்ட ‘5 பைசா’இருக்கா? - பிரியாணி சாப்பிடலாம் வாங்க!

அட்மின் மீடியா
0
நாளை அக்டோபர் 16ந் தேதியன்று உலக உணவு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கபடுகின்றது



இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணிக்கடை.
வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குகிறது

சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தொப்பி வாப்பா பிரியாணிக் கடைகளில் நாளை ஒருநாள் மட்டும், 5 பைசா நாணயத்தை தந்து ஒரு பிரியாணியை பெற்றுச் செல்லலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

உங்ககிட்ட ‘5 பைசா’இருக்கா? -  பிரியாணி சாப்பிடலாம் வாங்க!
மேற்கண்ட 4 கிளைகளிலும், 5 பைசா நாணயத்தை கொடுத்து முதலில் வரும் 50 நபர்களுக்கு மட்டும் தொப்பி வாப்பா பிரியாணி வழங்கப்படும் எனவும், ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உங்களிடம் 5 பைசா நாணயம் இருந்தால், நீங்கள் தொப்பி வாப்பா பிரியாணியை ருசித்து சுவைக்கலாம்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback