Breaking News

பேய் இருப்பதை நிரூபித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பில்லி, சூனியம் போன்ற மூட நம்பிக்கைகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'பேய் இருப்பதை நிரூபித்தால், அவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, ஒடிசாவில், கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார்.
 கன்ஜம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் விஜய் அம்ருதா குலாங்கே. இம்மாவட்டத்தில் உள்ள, கோபபூர் மற்றும் ஜெகன்நாத் பிரதா கிராமங்களில், சிலருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மந்திரவாதிகளிடம் அழைத்து செல்லப்பட்டனர். 


பில்லி - சூனியம் மூலம், ஒருவருக்கு மற்றொருவர் தீங்கு செய்ய முடியாது. உங்கள் உறவினர்களுக்கு உடல் நிலை சரியில்லை எனில், டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள். மந்திரவாதிகளிடம் செல்லாதீர்கள்.

 என் அறிவுக்கு எட்டியவரை, பேய் இல்லை. பில்லி - சூனியம் என்பது மூட நம்பிக்கை. ஒருவேளை பேய் உள்ளது என்றும், பில்லி - சூனியம் போன்ற செயல்களால் பலன் உள்ளது என நிரூபித்தால், அவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு தர தயாராக உள்ளேன்.என அதிரடியாக அறிவித்துள்ளார்

Tags: முக்கிய செய்தி

Share this