சினிமா தியேட்டரில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத இளம் பெண்கள் உட்பட 4 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வீடியோ
அட்மின் மீடியா
0
பெங்களூரில் ’அசுரன்’ படம் பார்த்தபோது தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத இளம் பெண்கள் உட்பட 4 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகின்ரது
https://twitter.com/IshitaYadav/status/1188703229846028288?s=19
தனுஷ் நடித்த அசுரன் படம் பெங்களூரில் ஓரியன் மாலில் இந்த திரை யிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இந்தத் தியேட்டரியில் படம் ஓடத் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது தியேட்டரில் இருந்தவர்கள் எழுந்து நின்றனர். ஆனால் அங்கு நான்கு பேர் மட்டும் எழுந்து நிற்கவில்லை.
அதனை அங்கு இருந்தவர்கள் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஏன், எழுந்து நிற்கவில்லை’ என்று கேட்டனர். அவர்கள் ஏதோ கூறினர். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. ’நீங்கள் என்ன பாகிஸ்தானை சேர்ந்தவர்களா? 52 வினாடி இசைக்கப்படும் தேசியகீதத்துக்கு மரியாதை செய்யாமல், எதற்காக 3 மணிநேரம் ஓடும் படத்தை பார்க்க வந்தீர்கள்?’ என்று ஆவேசமாகக் கேட்டனர்.
பின்னர் அவர்கள் நான்கு பேரும் வெளியேற்றப்பட்டனர்.
Tags: முக்கிய செய்தி