Breaking News

சுஜித்க்கு என்ன ஆச்சி டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் தண்ணிகேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தை

அட்மின் மீடியா
0
பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் இவரது மனைவி நிஷா இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களது மகள் ரேவதி சஞ்சனா வயது 2

சுஜித் என்ன ஆனான், உயிருடன் மீட்டு கொண்டுவந்து விடுவார்களா, என்று ஆர்வமும், ஆதங்கத்துடனும் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்வர்கள்  தங்கள் குழந்தை ரொம்ப நேரமாகவே காணோம் என்பதை இவர்கள் உணரவில்லை. தெரிந்து அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பித்தனர்.

அங்கெல்லாம் தேடிவிட்டு வீட்டு பாத்ரூமில் தேடிய போது அதிர்ச்சி அங்கிருந்த தண்ணீர் கேனில் இருந்த தண்ணீரை எடுக்க குழந்தை முயற்சித்து இருக்கிறாள். அந்த சமயத்தில், குப்புற விழுந்த அந்த தண்ணீர் கேனிலேயே சஞ்சனா விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கிறாள் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குழந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்










Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback