Breaking News

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

அட்மின் மீடியா
0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும். இந்த தாழ்வு மண்டலமானது வடகிழக்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback