Breaking News

26 அடி ஆழத்தில் இருந்த சுஜித் 85 அடி ஆழத்துக்கு சென்றது எப்படி

அட்மின் மீடியா
0
26 அடி ஆழத்தில் இருந்த சுஜித் 85 அடி ஆழத்துக்கு எப்படி சென்றார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி, கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை காப்பாற்றும் பணிகள் 3 வது நாளாக நடந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 25 ம் தேதி  மாலை 5.40 மணியளவில் அந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த உடனே, மீட்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன.

முதலில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பக்கவாட்டில் பள்ளம் தோண்டி அதன் வழியே சென்று குழந்தையை மீட்க பணிகள் நடந்தது

ஆனால் அந்த அதிர்வு காரணமாக குழந்தை மேலும் கீழே சென்று விடக்கூடும் என்ற அச்சத்தால், அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.


இதையடுத்து மணிகண்டன், ஸ்ரீதர், டேனியல் போன்ற தனிநபர் நிபுணர்களின் உதவியைக் கொண்டு கயிறு மூலம் குழந்தையை மீட்டெடுக்க முயற்சி நடைபெற்றது. 

மிகவும் நுணுக்கமாக அந்த பணிகளை மேற்கொண்ட போதிலும் மூன்று முறை கைகளில் இருந்து கயிறு நழுவிவிட்டது.


இதையடுத்து அதிகாலை, 1.30 மணியளவில் மீண்டும் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆள்துளை கிணறு இருந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.

 அங்குதான், பிரச்சினையே ஆரம்பித்துள்ளது. இந்த பள்ளம் தோண்டும் பணிகளில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக ஆள்துளை கிணறு மணல் சரிந்து சுஜித் மேலும் கீழே நழுவ தொடங்கிவிட்டார்.


படிப்படியாக சுஜித்  தற்போது 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டார். 

அதுவரை குழந்தையின் அழுகுரலாவது கேட்டு கொண்டு இருந்தது. 

ஆழம் அதிகரித்ததால் சுற்றுப்புறத்திலுள்ள ஈரமான மணல் மேலும் ஈரமாக மாறியிருக்கும். குழந்தையும் நீண்ட நேரமாக உள்ளே இருப்பதால் சோர்வடைந்து விட்டது.

சாப்பிடவும், குடிக்கவும் உணவு தண்ணீர் போன்ற எதுவும் இல்லாமல் அந்த குழந்தை சோர்வடைந்து இருக்கும் காரணத்தாலும், மற்றும் ஆழம் அதிகரித்துள்ளதன் காரணத்தால் அது அழும் குரல் கூட வெளியே கேட்கவில்லை.

 தற்போது சுரங்கம் அமைக்கும் பணி நடந்து 


Give Us Your Feedback