Breaking News

புதிய 1000 ரூபாய் நோட்டா? அய்யயோ யாரும் நம்பாதீங்க

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமுகவளைதளத்தில் புதிதாக 1000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வருகின்றது என போட்டோ ஷாப் செய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டை  ஷேர் செய்து வந்தார்கள் . கடந்த சில தினங்களுக்கு முன்பாகதான் நாம் பொய் என மறுப்பு செய்தி வெளியிட்டு  இருந்தோம்.



அதே போல் 

ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என வந்த செய்திக்கு    ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தியினை நம் அட்மின் மீடியாவில் தெளிவாக வெளியிட்டு இருந்தோம்


மேற்கண்ட 2 மறுப்பு செய்திகள் வெளியிட்ட பிறகும் மீண்டும் ஒரு புது 1000 ரூபாய் நோட்டு சமுக வலைதளத்தில் பொய்யாக பரப்பபடுகின்றது.
1000 நோட்டு கடந்த ஆகஸ்ட் 2017 வருடத்தில் இருந்து இந்த செய்தி வலைதளத்தில் பொய்யா  பல முறை நோட்டின் கலர், வடிவம் அதில் உள்ள வாசகங்களை மாற்றி பரப்பப்படுகிறது.


ஆகவே அனைவரும் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் ரிசர்வ் வங்கி அதிகார பூர்வமாக இது போல எந்த புதிய 1000 ரூபாய் நோட்டை இன்னும்  வெளியிடவில்லை.






அந்த 1000 ரூபாய் நோட்டு போட்டோ ஷாப் செய்யபட்டது .அந்த நோட்டிலேயே இது கற்பனை என்று செய்தி உள்ளது  .

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback