Breaking News

பேனர் வைக்க மாட்டோம் என்று கூறி திமுகவினர் பேனர் வைத்தார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

பேனர் வைக்க மாட்டோம் என்று கூறி திமுகவினர் பேனர் வைத்தார்களா? உண்மை என்ன


பேனர் வைக்க வேண்டாம் என கூறிய தளபதிக்கு வாழ்த்துகள்,’’ என்று கூறி திமுகவினர் பேனர் வைத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில்  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது ! போட்டோ ஷாப் செய்யப்பட்டது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன


கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது அதற்க்கு நீதிமன்றம் அரசியல் கட்சிகள் இனி அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என உத்ரவாதம் அளிக்க சொன்னது அதற்க்கு தி.மு.க கட்சி தலைவர் இனி கட்சி தொண்டர்கள் யாரும் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்தார்
அதற்க்கு யாரோ சிலர் நன்றி தெரிவித்து போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படமாகும்.
தன் உண்மையான புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback