காலாண்டு விடுமுறை ரத்து? என வலம் வரும் செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட காலாண்டு விடுமுறை ரத்து என வரும் செய்தி பொய்யானது என பள்ளி கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது
பள்ளி கல்வி திட்ட இயக்குனர் பிறப்பித்த உத்தரவில்,தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தியாகும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை
காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம்
என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: மறுப்பு செய்தி
