காஷ்மீர் மக்களின் ஆப்பிள் மரங்களை வெட்டினார்களா?
அட்மின் மீடியா
0
இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை அழிப்பது மட்டுமல்ல அங்கு இருக்கக்கூடிய பொருளாதாரத்தையும் அழிக்கின்றது.
காஷ்மீர் ஆப்பிள் உலகத்தரம் வாய்ந்த ஒரு கனி ஆகும் அதை வேரோடு வெட்டி அழிக்கின்றது இந்திய ராணுவம் என
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ உடன் இந்த செய்தி பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா வனபகுதியில் சட்ட விரோதமாக ஆப்பிள் மரங்களை சிலர் வளர்த்து வருகின்றார்கள்.
என ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்
அந்த வழக்கில் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த 09/05/2018 அன்று அரசு நிலத்தில் சட்டவிரோதமாக பயிறிட்ட ஆப்பிள் மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அதன் படி சிம்லா வனப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ள ஆப்பிள் மரங்களை அகற்றும் பனியில் வனத்துறையினர் ஈடுபட்டடனர்
அந்த வீடியோவை எடுத்து ஒரு சிலர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு மக்களின் பொருளாதாரத்தையும் நசுக்குவதாக ஒரு பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம் 1
அட்மின் மீடியாவின் ஆதாரம் 2
அட்மின் மீடியாவின் ஆதாரம் 3
அந்த பொய் வலையில் நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
