பாஜக எம்.பி. மனோஜ் திவாரி செல்வதற்காக.. காவல்துறையினர், ஆம்புலன்ஸை நிறுத்தினார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
பாஜக எம்.பி. மனோஜ் திவாரி செல்வதற்காக.. காவல்துறையினர், ஆம்புலன்ஸை நிறுத்தினர்கள் ஆம்புலன்சில், ஒரு பெண் மரணத்திற்காக போராடிக் கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கும்படி விடுத்த வேண்டுகோளை, காவல்துறையினர் ஏற்கவில்லை காலதாமதத்தால் கடைசியில், அந்த பெண் இறந்தார்
நீங்கள்.. இன்று இதை பகிரவில்லை என்றால், நாளை இது எவருக்கும், நிகழலாம்.... இனி.. உங்கள் விருப்பம்.
என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ உடன் இந்த செய்தி பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
அந்த வீடியோவில் சாலையில் ஆம்புலன்ஸ் நிற்கின்றது அதில் உள்ளே ஒரு பெண்மணி இருக்கின்றார். ஆம்புலன்ஸ் முன்பு பேரிகார்டு போடபட்டு காவலர்கள் அந்த ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி வைத்துள்ளார்கள். அவர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் உள்ளார்கள். அந்த செய்தியினை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். மேலும் அந்த பெண்மணி இறந்துவிட்டார் எனவும் பதிவிடுகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
இந்த சம்பவம் நடந்தது உண்மை தான் ஆனால் கடந்த 01.04.2017 அன்று டெல்லியில் நடந்தது
மேலும் அந்த பெண்மணி இறக்கவில்லை
அடுத்தது பிஜேபி , எம்.பி மனோஜ் திவாரிக்காவும் அந்த தடுப்பு போடவில்லை
அந்த சம்பவம் மலேசிய பிரதமர் இந்தியா வந்தபோது டெல்லியில் சாலையில் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க தடுப்பு போடப்பட்டது
ஆனால் இந்த செய்தியை எடுத்து தங்களுக்கு பிடிக்காத அரசியல்வாதிகளின் பெயரை சேர்த்து பொய்யாக பரப்புகின்றார்கள்
.
அந்த வலையில் நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
Tags: மறுப்பு செய்தி
