ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா இஸ்லாமிய மதத்திற்க்கு மாறினாரா? உண்மை என்ன
அட்மின் மீடியா
2
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஆல்யா மானசா இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறிவிட்டார்கள் என்று ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் உண்மைதான்
விஜய் டிவி ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா, அதே சீரியல் மூலம் பிரபலமடைந்த சஞ்சீவை காதலித்தார். இவர்களது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக இவர்கள் அறிவித்திருந்தார்கள்
மேலும், சஞ்சீவ் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் அவரது இயற் பெயர் சையத் அசாரூதீன் எனது ஆகும். சினிமாவிற்காக அவர் சஞ்சீவ் என பெயர் வைத்துள்ளார்.
இந்த நிலையில், சஞ்சீவ், ஆல்யா மானசாவின் திருமணத்திற்கு சஞ்சீவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தாலும், ஆல்யா மானசாவின் பெற்றோர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த 13 ம் தேதி ஆல்யா மானசா தன் முழு சம்மதத்துடன் மார்க்க கலிமா சொல்லி இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறி விட்டார்
மேலும் சையத் அசாரூதீன் தனது பெற்றொர்கள் சம்மதத்துடன், இந்திய தவ்ஹீத்ஜமாத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் இஸ்லாமிய முறைப்படி ஆல்யா மானசாவிற்க்கு நிக்காஹ் நடத்தி வைத்தார்.



அட்மின் மீடியா ...மக்களுக்கு கிடைத்த வரமே இறைவன் நாட்டத்தால் அருமை
பதிலளிநீக்குAl Hamdhu lillah
பதிலளிநீக்கு