உயிருடன் குழியில் புதைக்கபடும் மாடுகள்? காரணம் என்ன?
அட்மின் மீடியா
0
உயிருடன் குழியில் புதைக்கபடும் மாடுகள்? காரணம் என்ன?
இந்த செய்தி உண்மையா..? என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க.. அதன் உண்மை தன்மை என்ன என்பது பற்றி அட்மின் மீடியா களம் கண்டது..
ஆம் அந்த செய்தி உண்மைதான்..
எதனால் அந்த மாடு கொல்லப்படுகிறது..?
நிலகை இன மாடுகள் பல ஆண்டுகளாக அரசின் அனுமதி உடன் கொல்லப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் பயிரிடும் கோதுமை மற்றும் பருப்பு உள்ளிட்ட பயிர்களை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக சேதப்படுத்தி வருவதாகவும், அப்படி பயிரிடப்படும் பகுதிகளில் நிலகை இன மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விவசாய நிலங்களை பாதுகாக்க நிலகை இன மாடுகளை கொல்வதற்கு அனுமதியை கோரினர்.
2016-ல் பீகாரில் 6 நாட்களில் மட்டும் 200 நிலகை இன மாடுகள் சுட்டுக் கொல்லப்பட்டன.
சேதத்தை ஏற்படுத்தும் நிலகை மாடுகள் குறித்து உள்ளூர் விவசாயிகள் புகார்கள் தெரிவித்தால் வனத்துறையின் சார்பில் ஷூட்டர்ஸ் அனுப்பி வைக்கப்பட்டு அச்சுறுத்தும் மாடுகளை சுட்டுக் கொல்கின்றனர்.
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம் 2
அட்மின் மீடியா ஆதாரம் 3
அட்மின் மீடியா ஆதாரம் 4