Breaking News

இ- சிகரெட் தயாரிப்பு, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை

அட்மின் மீடியா
0
சீனாவை சேர்ந்த ஹான் லிக் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு Electronic Nicotine Delivery Systems எனப்படும் இ-சிகரெட்டை கண்டுபிடித்தார்.



பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவிதான் இ சிகரெட்

இதனுள்ளே நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைக்கால் என்ற திரவம்  இருக்கும். அந்த கருவி பேட்டரியால் இயங்ககூடியது 

சிகரெட் புகைக்க நினைக்கும்போது, இதை வாயில் வைத்து உறிஞ்சினால்  பேட்டரி இயங்கும். அப்போது, நிகோடின் சூடேறி, புகை கிளம்பும்.

புகைப்பவர் அதை உள்ளிழுக்க, புகையிலை சிகரெட்டைப் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும். இதில், நிகோடின் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால், இது தீங்கற்றது என்று பலரும் எண்ணுகின்றனர்.

மேலும், ‘இ-சிகரெட் எந்த வகையிலும் புற்றுநோயை ஏற்படுத்தாது.
நெருப்பு இல்லை. சாம்பல் இல்லை. அதிக அளவில் புகையும் இல்லை. ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நவீன சிகரெட்’ என்று பலரும் நினைக்கின்றார்கள்

ஆனால் நிகோடின் எந்த வகையில் உடலுக்குள் நுழைந்தாலும்  ஆபத்துதான். இது புற்றுநோய், இதயநோய், ரத்தநாள நோய்கள் உள்ளிட்ட அபாயங்களை  ஏற்படுத்தக்கூடியது.


இந்நிலையில், நாடு முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விளம்பரம் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார்.



Give Us Your Feedback