கேரளாவில் ஆச்சி மிளகாய் பொடிக்கு தடையா ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
தமிழகத்தை சேர்ந்த ஆச்சி மசாலா தூள் தயாரிப்பு நிறுவனம் கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்திய ஆய்வில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான இட்டியோன், புரபேனோபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மிளகாய் பொடிக்கு தடை விதித்து கேரள உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்
தகவல்கள் வெளியானது
ஆனால் ஆச்சி மசாலா நிறுவனம் இதனை மறுத்து செய்தி வெளியிட்டது.
மேலும் அதன் நிறுவனர் தன் பேஸ்புக் பக்கத்திலும் மறுப்பு செய்தி வெளியிட்டு இருந்தார்
அதே சமயம் கேரளா திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை ஆச்சி மசாலாவிற்க்கு நாம் தடை விதிக்கவில்லை
மேலும் ஆச்சி மிளகாய் பொடிக்கும் தடை இல்லை
ஜூன் மாதத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட மிளகாய் பொடி
மட்டுமே விற்பனை செய்யகூடாது என
அறிவிக்கபட்டுள்ளது
குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட மிளகாய் பொடி தயாரிப்பே சோதனைகளில் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தயாரிப்பும் இல்லை, என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
Tags: மறுப்பு செய்தி


