நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வீடியோ பதிவு ஒன்றையும் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என்று அறிய அட்மின் மீடியா களம் கண்டது
நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்க்கு மாறிய செய்தி பொய்யானது ஆகும்
யாரும் நம்பவேண்டாம் .
அப்படியானால் உண்மை என்ன?
நடிகர் சூர்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறவில்லை. இது சிங்கம்2 படத்தின் ஷூட்டிங் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்றபோது அருகே உள்ள மசூதிக்கு வருமாறு சூர்யாவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்து இருந்தார்.
அங்கு சூர்யா பிராத்தனை செய்த போது வீடியோ பதிவு செய்யப்பட்டது.
அந்த வீடியோவை பார்த்த சிலர் சூர்யா மதம் மாறியதாக தவறாக வைரலாகி வருகிறது.
மேலும் இதே போல் சூர்யா இஸ்லாமிய மதத்திற்க்கு மாறிவிட்டார் என்ற வதந்தி கடந்த 2017-ம் ஆண்டே பரவியது
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம் 2
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி

