லஞ்சம் வாங்கிய அதிகாரியை தண்டித்த வட கொரிய அதிபர்? உண்மையா?
அட்மின் மீடியா
0
லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவரை மீடியாக்கள் முன்னிலையில்
குழியில் தள்ளி வட கொரிய அதிபர் தண்டனை அளித்தார் என்று ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் ஷேர்
செய்யபடுகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம்
பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி அட்மின் மீடியா களம் கண்டது
அதில், வட கொரிய அதிபர் மற்றும் ஒருவர் மீடியாக்கள் முன்னிலையில் கை குலுக்கி ஒன்றாக நடக்கின்றனர்.
திடீரென்று தரையில் அமைக்கப்பட்ட இடம் திறக்கிறது, அதில் அந்த அதிகாரி விழுகின்றார் வட
கொரிய அதிபர் மட்டும் தனியாக நடந்து வருகிறார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு வட கொரிய அதிபரும் தென் கொரிய அதிபரும் சந்தித்து பேசியது மேலும் தென் கொரிய அதிபரின் கையைப் பிடித்து கிம் ஜாங் வட கொரிய எல்லைக்குள் நுழைவார். சில விநாடிகள் அங்கிருந்தபடி இருவரும் பேசுகின்றனர். பின்னர் மீண்டும் இருவரும் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்து அங்கு புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு
போஸ் கொடுக்கின்றனர்.
அந்த வீடியோவை யாரோ சிலர் எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்
உண்மையான வீடியோ உங்கள் பார்வைக்கு
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம்2
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி