அசல் சான்றிதழை கல்லூரியில் இருந்து வாங்கி தந்த சட்ட சேவைகள் ஆணையம்
அட்மின் மீடியா
0
சென்னையில் உள்ள சட்ட சேவைகள் ஆணையத்திடம் நான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பார்மரி கல்லூரியில் படித்து வருகிறேன்.
என்னுடைய தந்தைக்கு எதிர்பாராதவிதமாக விபத்து நேரிட்டது.
அதனால், என்னால் மேற்கொண்டு படிப்பினை தொடர முடியவில்லை.
இதனையடுத்து, என்னுடைய அசல் சான்றிதழ்களை அளிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டேன்.
ஆனால், நான்கு ஆண்டு படிப்புக்கான தொகை ரூ4 லட்சத்தினை முழுமையாக செலுத்தினால்தான் சான்றிதழ்கள் திருப்பி தரப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனால் சான்றிதழ்களை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சட்ட சேவைகள் ஆணைய அதிகாரிகள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசினர்.
அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கல்லூரி நிர்வாகம் அசல் சான்றிதழ்களை அனுப்பி வைத்தது.
உடனடியாக அந்த மாணவரிடம் அதிகாரிகள் சான்றிதழ்களை ஒப்படைத்தனர்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூன்று நாட்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரு ரூபாய் செலவு இல்லாமல் தன்னுடைய சான்றிதழ்களை சட்டபோராட்டம் மூலம் பெற்றுள்ளார்.
