தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நாளை முதல் அக். 1-ம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்
குறிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது,
பயன்பாட்டில் இருந்து நீக்குவது மற்றும் மறுசுழற்சிக்கு உட்படுத்துவது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான புகைப்படம் எடுத்து அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
