விதிமுறை மீறி பேனர் வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை
அட்மின் மீடியா
2
விதிமுறை மீறி பேனர் வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஒரு பேனருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பேனர்கள் வைக்க வேண்டும்.
பேனர் வைக்கும் 2 நாட்களுக்கு முன் போலீசாரிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். மேலும் பேனர் வைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடமிருந்து அதற்கான தடையின்மைச் சான்று மற்றும் அமைக்கப்பட உள்ள இடத்துக்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பேனர்கள் வைப்பதற்கான அனுமதி கட்டணம் ரூ.200, காப்பீட்டு தொகை ரூ.50 செலுத்த வேண்டும்.
அனுமதி பெற்றதை விட அதிக பேனர்கள் வைத்தாலும் சட்ட விரோதமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Good jop
பதிலளிநீக்குGood jop
பதிலளிநீக்கு