Breaking News

கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்! பாதுகாப்பு வழிமுறைகள் இவைதான்

அட்மின் மீடியா
0
ரான்சம்வேர் வைரஸ் என்றால் என்ன?


ஆட்களைக் கடத்திச் சென்று மறைத்துவைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவது போலத்தான் இதுவும்  உங்கள் கம்பியூட்டரில்  உள்ள அனைத்து டேட்டாவையும்  தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, நீங்கள் பயன்படுத்த முடியாத வகையில் மாற்றிவிடும்


நீங்கள் அதனை ஓப்பன் செய்யமுடியாது அவர்கள்  கேட்கப்படும் தொகையை செலுத்தும் வரை கணினியிலுள்ள கோப்புக்களை பூட்டி (Encrypt) வைத்துக் கொள்ளும் வைரஸ் ரான்சம்வேர்.

தற்போது பரவிவரும் ரான்சம்வேர் வைரஸ் கேட்கும் தொகை 980 டாலர்கள். இது முதல் மூன்று நாட்களுக்குத்தான். அதற்குப் பிறகு பிணயத் தொகை 490 டாலர்களாக அதிகரிக்கும். இந்த வைரஸ் மென்பொருள் தகவல்களை மீட்க டிஜிட்டல் பண வடிவமான பிட் காயின்களே பயன்படுத்தப்படுகின்றன.

 இந்த பிட்காயின் பரிவர்த்தனையில் எவருக்கு இந்தப் பணம் போய்ச் சேருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினம். அதனால், இன்று வரை இந்த வைரஸ் யாரால் பரப்பப்படுகிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை 

நீங்கள் பணம் கொடுத்து தகவல்களை மீட்டு விட நினைத்தாலும். தகவல்கள் திரும்பக் கிடைத்துவிடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.
நம்ம கம்பியூட்டரில் எப்படி வருகின்றது இந்த ரான்சம்வேர்


இண்டர் நெட் மூலமே இந்த வைரஸ் அதிகம் பரவுகின்ரது. இ-மெயில் அல்லது இணையத்தின் ஏதாவது ஒரு வழியில் கணினி ஒன்றில் நுழைந்து, அதன் ஒட்டுமொத்தத் தகவல்களையும் லாக் செய்துவிடும் இந்த ரான்சம்வேர். தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என்பதால் அதனை பயனாளர்களால் அக்சஸ் முடியாது.'ரான்சம்வேர் வைரஸ்' நாம் கணினி மற்றும் இணைய சேவையை பயன்படுத்தும் போது சில ஆங்கில எழுத்துக்கள் கலந்த அர்த்தமற்ற மொழியில் கட்டளைகளை பிறப்பிக்கும். எதிர்பாராமல் அதை கிளிக் செய்தால் நம் கணினியில் உள்ள கோப்புகள் உடனே முடக்கப்படும்.


இந்த வைரஸ் தற்போது தமிழகத்திலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வீட்டு உபயோக கணினி உட்படஅனைத்து இடங்களிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது.


இதில் இருந்து எப்படித் தப்பிப்பது   • -மெயில் மூலமாக தான் ரான்சம்வேர் அதிகளவில் பரப்பப்படுகிறது. எனவே, தெரியாத முகவரியிலிருந்து வரும் -மெயிலைத் திறக்காமல் இருந்தாலே பாதிப் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். முன்பின் தெரியாத முகவரியிலிருந்து மெயில் வந்தால், அதிலிருக்கும் அட்டாச்மென்ட்டை திறப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு முறை இணைப்பைத் திறந்ததுமே, ரான்சம்வேர் தனது வேலையைக் காட்டத் துவங்கிவிடும். எனவே, சந்தேகத்திற்குறிய இமெயில்கள் எனில் அவற்றை கிளிக் செய்யாமல் டெலிட் செய்வது நல்லது தேவையில்லாத 'லிங்க்'குகளை ஓபன் செய்வது, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்  • தேவையற்ற லிங்க்-களில் க்ளிக் செய்து வைரஸ் வலையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக, . exe pif tmp  url vb vbe scr reg  cer pst cmd com ba dll dat hlp hta js wsf wncry, . wnry, .wcry, .wncryt எக்ஸ்டென்ஷன் உள்ள கோப்புகளை ஓபன் செய்வதையோ, டவுன்லோட் செய்வதையோ தவிர்க்கவேண்டும்  • ஆன்டி வைரஸ் இல்லாமல் இண்டர் நெட் உபயோகிக்காதீர்கள்.அதை அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப பாதுகாப்பு தரும்படி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளில் மாறுதல்களைக் கொண்டுவருவார்கள். எனவே, ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும்
  • விண்டோஸ் செயல் தளத்தைக் கொண்டுள்ள கம்ப்யூட்டர்களையே இந்த வைரஸ் அதிகமாகப் பாதித்துள்ளது. அதனால், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  •  கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.  •  உங்களுக்கு தேவையான முக்கியமான கோப்புகளை அவ்வப்போது பேக்-அப் எடுத்துக்கொள்ள வேண்டும்.  • பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.  • உங்கள் கணினியானது ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிப்பது நல்லது. கணினியிலுள்ள தகவல்கள் இணையம் மூலமாக மற்றொரு கணினிக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும், உங்கள் கணினியிலிருந்து மற்ற கணினிக்கும் ரான்சம்வேர் பரவுவதையும் தடுக்க முடியும்.  •  உங்களுடைய இனையத்தில் வெப் மற்றும் -மெயில் பில்டர்களை பயன்படுத்துங்கள். மோசமான டொமயின்கள், முகவரிகளை ஸ்கேன் செய்ய இந்த சாதனங்களை கான்பிகர் செய்யவும். இதுபோன்ற இணையங்களில் இருந்து செய்திகளை பெறுவதற்கு முன்னதாக பிளாக் செய்து விடுங்கள்.  •  ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல், ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் "நோ மோர் ரான்சம்' https://www.nomoreransom.org/ எனும் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இணைய தளத்தின் மூலம் புகார் அளிக்கலாம். வைரஸ் பாதுகாப்பு, தற்காப்புக்காக இலவச ஆலோசனையும் பெறலாம்இதுவரை கண்டறியப்பட்ட எண்ணற்ற ரேன்சம்வேர்களில் இருந்து, தகவல்களை மீண்டும் அன்-லாக் செய்யும் அப்ளிகேஷன்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. மேலும், ரான்சம்வேர்களில் இருந்து தகவல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.Share this