வாட்ஸ்-அப் குருப் செய்த சாதனை
அட்மின் மீடியா
0
வாட்ஸ்-அப் குழுமம் செய்த சாதனை
366 கி.மீ., தூரம்
4:50 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்
4:50 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்
ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த அமீருல்லா 16. தனது பெற்றோர்களுடன் மலேசியாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த இவர். முதுகு வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தமிழகம் வந்தார்.
கடும் முதுகு வலிக்கு பாதிக்கப்பட்ட அமீருல்லாவை பெற்றோர்கள் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதுகு தண்டுவடத்தில் புற்று நோய் பாதிப்புள்ளது என்றும்
5 மணி நேரத்திற்குள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் காப்பாற்றலாம், என தெரிவித்தனர்.
அங்கு செல்வதற்கு 366 கி.மீ., துாரம். போக்குவரத்து நெரிசலில் செல்ல குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் ஆகும். விமானம் மூலம் சென்றால் விமான நிலையத்திற்கு செல்வதற்கு தாமதமாகிவிடும். அதிக நேரம் ஆகும், என்பதால், அவரது பெற்றோர் மிகவும் வேதனைப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் உள்ள தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக ஆம்புலன்ஸ்காரர்கள் தாங்கள் சென்று சேர்க்கிறோம், என புறப்பட்டனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய டவுன்களில் போக்குவரத்து பாதிக்கும் இடங்களில் அவர்கள் வாட்ஸ்அப் குழுக்களை இணைத்தனர்.
த.மு.மு.க., எனும் அமைப்பு போலீசாருடன் இணைந்து அனைத்து ஊர்களிலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். அதற்கு பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்கினர்.
ராமநாதபுரத்தில் இருந்து மாலை 5:00 மணிக்கு முகமது அமிருல்லாவை ஆம்புலன்ஸ்சில் ஏற்றிக்கொண்டு இஜாப் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
தொண்டியில் நவீன ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு செய்து அதில் முகமது அமிருல்லாவை ஏற்றினர். பின் இரு ஆம்புலன்ஸ்கள் பின்னால் சென்றன. ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பு ஒலி பெருக்கியில் ,உயிர் காக்கும் பொருட்டு அதிவேகமாக ஆம்புலன்ஸ் வருவதால் போக்குவரத்திற்கு பொது மக்கள் இடையூறு செய்ய வேண்டாம் என அறிவித்துக்கொண்டே சென்றனர்.
த.மு.மு.க., வினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள், டிராபிக் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.ஆம்புலன்ஸ் எவ்வித போக்குவரத்து இடையூறு இல்லாமல் கிழக்கு கடற்கரை சாலைகளை கடந்து நாகபட்டினம், காரைக்கால், சிதம்பரம் வழியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு 9:50 மணிக்கு சென்றடைந்தது. முகமது அமீருல்லாவை டாக்டர்கள் பரிசோதனை செய்து, பின் அறுவை சிகிச்சைக்கு அனுமதித்து, சிகிச்சையளித்து வருகின்றனர். தற்போது முகமது அமீருல்லா நல்ல நிலையில் இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொது மக்கள், தன்னார்வர்கள், டிராபிக் போலீசார், த.மு.மு.க., வினர் இணைந்து இளைஞர் உயிரை காப்பதற்கு எடுத்த நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டார்
இளைஞரை காப்பாற்ற ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு ஆம்புலன்ஸ்சில் 366 கி.மீ., துரத்தை 4 மணி 50 நிமிடத்தில் கடந்து காப்பாற்றியுள்ளனர்.
