ஹெல்மட் மோடாமல் வந்த இளைஞரை குழந்தை கண் முன்பு போலிஸார் அடித்தார்களா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் ஹெல்மெட் இல்லாத காரணத்தால் பணம் கேட்டு பணம் இல்லை என்று சொன்னதால் தன்மகனை அழைத்துக்கொண்டு போகும்போது காவல்துறை அவரை பிடித்து அடித்து உதைத்து கொடுமைப்படுத்தும் இந்த காட்சி தன் குழந்தை கண் முன்னே நடக்கிறது நீங்களே பாருங்கள்
என்ற ஓர் செய்தியினை பலரும் பலருக்கும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா ?காவலர்கள் ஹெல்மட் இல்லாததற்க்காக அடித்தார்களா?
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
உண்மை என்ன?
அந்த சம்பவம் உ.பி யில் உள்ள சித்தார்த்நகரில் இருக்கும் கேஸ்ராஹா காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட எல்லையில் நடந்தது
வீடியோவில் தாக்கப்பட்ட நபர் ராமேஸ்வர் பாண்டே என்பவர் ரியாசுதீன் என்ற நபரிடம் மொபைல் போன் சார்ஜ் செய்வது சம்மந்தமாக ஏற்ப்பட்ட தகராறு காரணமாக அவரை அடித்து உடைத்து விட்டு அங்கு இருந்து செல்லும் போது அவரை பின் தொடந்து வந்த போலீசார் அவரை கைது செய்ய முற்பட்டபோது நடந்த சம்பவம் தான் நீங்கள் பார்த்தது.
அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் அந்த இரு போலீசாரையும் உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.
அட்மீன் மிடியா ஆதாரம்
ஆகவே நடந்த இந்த சம்பவத்தைத்தான் புதிய வாகன சட்ட திருத்தத்திற்க்கு பிறகு இது போன்று நடக்கும் விசயங்களை பொய்யாக மக்கள் பரப்பிக்கொண்டு உள்ளனர்
அந்த வலையில் நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
Tags: மறுப்பு செய்தி