காஷ்மீர் மக்கள் ஊர்வலம் என்று வீடியோ ஷேர் செய்கின்றார்களே அந்த வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் தங்கள் நிலத்தை இந்தியாவில் இருந்து விடுவிப்பதற்காக நேற்று வீதியில் ஊர்வலமாக சென்றனர் ...
இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெரிய பேரணியை மறைத்தததால்... இந்த வீடியோவை உலகம் முழுவதும் பரப்புமாறு காஷ்மீர்களில் ஒருவர் கேட்டுக்கொண்டார். எனவே, தயவுசெய்து முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள். என்று சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின் மீடியா அந்த செய்தியின் உண்மை அறிய களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது ஆகும்
அந்த செய்தியின் உண்மை என்ன
புர்கான்வானி, ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக ஊடகங்களில், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் காஷ்மீரி மக்களைக் கவரும் வகையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்தவர்.
புர்கான் வானி கடந்த 08 .07. 2016 அன்று இந்தியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் அவரது இறுதி ஊர்வலம் தான் அந்த வீடியோ
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://www.youtube.com/watch?v=wyEZeFsXVbk
Tags: மறுப்பு செய்தி
