Breaking News

பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்தாரா ஸ்டாலின்? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்தாரா ஸ்டாலின்? உண்மை என்ன?


மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு தி.மு. தலைவர் மு..ஸ்டாலின் பாத பூஜை செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி உண்மையா  என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது ! போட்டோ ஷாப் செய்யப்பட்டது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
கடந்த மே 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தையொட்டி தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் மு..ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். உழைப்பாளர் தின பேரணி என்பதால் சிவப்பு நிற சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றார் மு..ஸ்டாலின். பேரணியின் முடிவில், உழைப்பாளர் தின நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மு..ஸ்டாலின்.


மே தின நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்திய படத்தை மார்ஃபிங் செய்து, பங்காரு அடிகளார் காலில் பூ தூவி மரியாதை செலுத்துவது போல் போட்டோஷாப் செய்துள்ளனர்.
அதன் அசல் போட்டோ

எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback