கேரள கல்லூரியில் மாணவர்கள் பாகிஸ்தான் கொடியுடன் ஆரவாரம்? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கேரள மாநிலம் கோழிக்கோடு சில்வர் கல்லூரியில் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத மாணவர்கள் பாகிஸ்தான் கொடியுடன் ஆரவாரம்! என்று ஒரு செய்தியினை பலரும் சமூக வலை தளங்களில் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது.
அந்த செய்தி உண்மை இல்லை பொய்யானது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் பெரம்பரா சில்வர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி யூனியன் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது இந்த சம்பவம் நடைபெற்றது மாணவர்கள் கையில் ஏந்திய கொடி பாகிஸ்தான் நாட்டின் கொடி போல் இருந்த காரணத்தினால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது

ஆனால்,உண்மையில்
மாணவர்கள் கையில் ஏந்திய கொடியானது பாகிஸ்தான் நாட்டின் கொடி அல்ல, MSF
முஸ்லீம் மாணவர்கள் முன்னணி என்ற அமைப்பின் அமைப்பின் கொடியாகும் அதனை பலரும் தவறாக புரிந்து கொண்டு பாக்கிஸ்தான் கொடி என்று பரப்பி வருகின்றார்கள்
Tags: மறுப்பு செய்தி