Breaking News

டோல் கட்டணம் கட்டுவதால் உள்ள பயன்கள் என்ன என்று தெரியுமா உங்களுக்கு ?

அட்மின் மீடியா
0
டோல் கட்டணம் கட்டுவதால் உள்ள பயன்கள் என்ன என்று தெரியுமா உங்களுக்கு ?


நம்மில் பலரும் பல ஊர்களுக்கு செல்கையில் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி சென்றிருப்போம்


ஆனால் அதன் பயன் பற்றி நம்மில் பலரும் அறிந்து கொண்டதில்லை


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவசரக் காலங்களில் எளிதில் தொடர்பு கொள்ள  1033 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்


1. விபத்து சம்மந்தமாக  தகவல் அளித்தால்  உடனடியாக அருகில் உள்ள சுங்கச் சாவடி, தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஆம்புலன்ஸ், 108 சேவை மையம், காவல் நிலையம், அவசரச் சிகிச்சை மையம் ஆகியவற்றுக்குத் தொடர்பு கொண்டு விபத்து பற்றி உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்


2.நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது உங்களது வாகனம் பழுது அடைந்தாலோ அல்லது டயர் பஞ்சர் ஆனால் அதற்காகவும் இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அதற்கான உதவிகள் உங்கள் இடத்திலேயே வந்து கிடைக்கும்.


3. மேலும் சுங்கசாவடி பற்றியும்  சாலை வசதிகள் பற்றியும் உங்கள் குறைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம்


4. உங்கள் வாகனம் பெட்ரோல்/ அல்லது டீசல் இல்லாமல் நின்றுவிட்டால் உதவிக்கு ஆள் அனுப்புவார்கள்


5 உங்கள் பயனத்தின் போது உடல் நலகுறைவு ஏற்பட்டால் மருத்துவசிகிச்சை செய்யப்படும்


மேலும் நாட்டின் எந்த இடத்திலிருந்தும் இந்த கட்டணமில்லா தொலைபேசி மூலமாக நெடுஞ்சாலையில் பயணிப்போர் அவசர உதவியை பெற முடியும்.


மேலும் மொபைல் அப்ளிகேஷனையும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.




சாலை அவசர உதவிக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 1033 என்ற புதிய தொலைபேசி எண் நிச்சயம் நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு பயனுள்ளதாக அமையும்.


மேலும் விவரங்களுக்கு




மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1033

Share this