5ம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இல்லை
அட்மின் மீடியா
0
5ம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இல்லை
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன்
5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மத்திய அரசின் திட்டமாகும்.
5 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்.
பொதுத்தேர்வு திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசிடம் 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்
