Breaking News

ஜின்கள் தோண்டிய 300 கிணறுகள்? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
சுலைமான் நபியின் காலத்தில் ஜின்களால் தோண்டப்பட்ட கிணறுகளா..? உண்மை என்ன.?


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோவில் கற்பாறையில் கிணறு உள்ளது அதில் நல்ல சுவையான நீர் உள்ளது


அந்த கிணறு சுலைமான் நபி ஸல் காலத்தில்  ஜின்களால் தோண்ட்டப்பட்ட கிணறுகள் என்று ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது


இந்த கிணறுகள் சவுதி அரேபியாவின் வடக்கே உள்ள ரஃபா நகரின் தெற்கேவும் ஹெயில் நகரத்திலிருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமத்தில் உள்ளது


மேலும் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் இது போன்று முந்நூறு கிணறுகள் அங்கு உள்ளன.


இந்த கிணறுகள் நபி சுலைமான் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது தங்களது போர் வீரர்களின் தாகத்தை உணர்ந்து ஜின்களுக்கு கிணறுகளைத் தோண்டுமாறு கட்டளையிட்டார்  எனவும் அதற்க்கு ஜின்கள் தோண்டிய கிணறு என
வரலாற்றில் நடந்தது என கூறுகின்றார்கள்


உண்மையில் இந்த கிணறுகள் ஜின்கள் தோண்டியதா.?


ஜின்கள் இந்த கிணறுகள் தோண்டியதற்க்கு வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை


ஆனால் அதே சமயம் மனிதனால் அந்த கிணற்றை தோண்டவும் முடியாது
ஏன் என்றால் அந்த கிணறுகள் அனைத்தும் மிகவும் ஆழமானவை
மேலும் ஒரு கையளவு அகலத்தில் தான் அந்த கிணறு உள்ளது


எனவே அந்த கிணறுகள் ஜின்களால் தோண்டியதாக நம்பப்படுகின்றது


மேலும் கிங் சவுத் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் நீர்வளவியல் பேராசிரியர் டாக்டர் அப்துல் அஜீஸ் அல் பாஸம்,


இது போன்று கரும்பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகள் போல இயற்கையாகவே அமைந்திருக்கும்.
அன்றைய காலத்தில் பாலைவனங்களில் ஆடு, கழுதை, ஓட்டகம் போன்ற கால்நடைகளில் நீண்டநாட்கள் பிரயாணம் செல்லும் கூட்டத்தினர், இது போன்ற பாறை ஊற்று நீர் கிணறுகளில் தான் தண்ணீர் எடுத்து தங்களது தேவையை பூர்த்தி செய்து அந்த கிணற்றை மற்றவர்கள் அடையாளம் காணும் விதமாக கிணற்றை மூடி கற்களையோ அல்லது வேறு எதனையோ வைத்து விட்டு போவார்கள். 

ஆகவே இது இயற்கை நிகழ்வாக தான் இருக்கும் என நம்பலாம். என்று கூறுகின்றார்


அட்மின் மீடியா ஆதாரம் 1




இதிலிருந்து நாம் என்ன புரிகிறது என்றால் நீரோட்டம் பூமிக்கடியில் இருக்கிறது.


குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள பாறைகளில் பல மீட்டர் ஆழத்திலிருந்து நீர் வரும். 

அது பாலைவனமாக இருந்தாலும் சரியே, சோலைவனமாக இருந்தாலும் சரி, கற்பாறை யானாலும் சரியே..


அடுத்ததாக, ஜின்கள் பற்றி...


ஜின்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கைப்படி மனித படைப்பு போல மற்றுமொரு படைப்பு


  இந்த ஜின்களை இறைதூதர்களை தவிர்த்து மனிதர்களால்  பார்க்க முடியாது
சுலைமான் என்கிற இறைதூதருக்கு இறைவன் ஜின்களை வசபடுத்தி கொடுத்துள்ளதாக இஸ்லாம் கூறுகிறது.
அப்படியானால் இந்த கிணறுகள் சுலைமான் நபியவர்களின் கட்டளைபடி ஜின்கள் தோண்டியிருக்கும் என்று கூறுவது உறுதியான ஆதாரமில்லை, இது ஒரு வித நம்பிக்கை மட்டுமே 

இதுபற்றி நபிகள் நாயகம் கூறியதாக எந்த ஆதாரபூர்வ செய்தியும் அறியவில்லை.


பொதுவாக சில பிரதேசங்களில் இயற்கையாக சில அசாதாரண மாற்றங்கள் உருவாகியிருக்கும். 


உதாரணமாக மலைகளிலோ, பாறைகள் நிறைந்த பகுதியிலோ கரும்பாறைகள் அடங்கிய பாலைவனங்களிலோ குகைகள் ஏற்பட்டு அதில் பல விலங்கினங்கள் வாழும். அதில் சில குகைகள் மிக அற்புதமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும் அதை மனிதர்கள் ஏற்படுத்தியதல்ல மாறாக இயற்கையாக அது ஏற்பட்டிருக்கும்.


இதற்கும் வேறு எந்த மூட நம்பிக்கையை காரணம் காட்ட கூடாது.


இதுவும் இறைவனின் படைப்பு என்ற மெய்யான நம்பிக்கையின் அடிப்படையில் கடந்து செல்ல வேண்டும்.


அது போல் தான் இதுவும் நமக்குள்ள சிற்றறிவு கொண்டு ஆராய்ந்ததில் கூறுகிறோம்..


 அந்த கிணறுகள் மனிதனால் தோண்டவும் முடியாது என்பதும் உண்மை

பாலைவனத்தில் பாறையின் கிணற்றில் நீர் வருவது எனில் அது ஜின்கள் தோண்டியிருக்கும் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே, 

ஆனால் இதற்கு திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லை.என்பது மட்டுமே உண்மை.
  • JOIN ADMIN MEDIA WHATS APP GROUP please Click

https://chat.whatsapp.com/5sKRhpw4xzf7YHBTq5why9




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback