Breaking News

பைக்கில் வந்த 2 பேர்; செயினை பறித்தார்:ஆனால் அந்த பெண்னின் சமயோசித புத்தியால் பிடித்து அடித்து போலிஸில் ஒப்படைப்பு

அட்மின் மீடியா
0
டெல்லியில் நாங்காய் என்ற இடத்தில் 2 பெண்கள், ரிக்‌ஷாவில் வந்து இறங்குகிறார். அப்போது பைக்கில் ஹெல்மட் போட்டு வந்த 2 பேரில் பின்னால் உட்கார்ந்திருந்த இளைஞர், அந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த செயின்னை பறித்தார். 


உடனே பைக்கை வேகம் எடுத்தார்கள். ஆனால் அதற்க்குள் சுதாரித்த அந்த 2 பெண்களும் செயின் பறித்த நபரை அப்படியே பைக்கோடு இழுத்து பிடித்தார். இதில் பைக் கீழே சாய்ந்து விழுந்ததில் அந்த 2 இளைஞர்களும் கீழே விழுந்தனர். 

பைக்கை ஓட்டி வந்த நபர், தலையில் ஹெல்மெட்டோடு தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டார். அந்த பெண்களிடம் மாட்டி கொண்ட இளைஞனை, பொதுமக்களும் சேர்ந்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். 

அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சி பதிவானது. இந்த வீடியோ இப்போது வெளியாகி வைரலாகிறது.


அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு






https://www.youtube.com/watch?v=cC1HZmXPslI

Give Us Your Feedback