அதிர்ச்சி: பப்ஜி கேம் விளையாடியதால் 19 வயது இளைஞருக்கு பக்கவாதம்
அட்மின் மீடியா
0
அதிர்ச்சி:
பப்ஜி
கேம்
விளையாடியதால்
19 வயது இளைஞருக்கு பக்கவாதம்
ஹைதராபாத்தில் 19 வயது வாலிபருக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாதத்தினால் அவரின் வலது காலும், வலது கையும் செயல்படாமல் போயுள்ளது. அவரது குடும்பத்தார் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்
இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஏற்பட்ட ரத்தத் தடையால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அவர் உடல்நலனில் அக்கறை இல்லாமல் ஒரே இடத்தில் முடங்கி
மொபைல் கேம் விளையாட்டுகளில் இருந்ததே இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெற்றோர், கூறுகையில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல், தண்ணீர் குடிக்காமல் ஒருநாளைக்கு 10 மணி நேரம் வரை பப்ஜி விளையாடுவான். திடீரென கை, கால்களை அசைக்க முடியவில்லை எனக் கூறினான். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தோம் என தெரிவித்தனர்.

