நிலவில் சந்திரயான் 2 இறங்குவதை நேரடியாக பார்க்க பொதுமக்களுக்கு இஸ்ரோ ஓர் அரிய வாய்ப்பு
அட்மின் மீடியா
0
நிலவில் சந்திரயான் 2 இறங்குவதை நேரடியாக பார்க்க
பொதுமக்களுக்கு இஸ்ரோ ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக
சந்திரயான் 2 என்ற விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் செப்டம்பர் 8 ஆம் நாள் நிலவின்
தென்துருவத்தில் இறங்கும் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது.
இது போல் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் காட்சியை
பிரதமர் நரேந்திர மோடி காணவுள்ளார். அவருடன் இணைந்து பொதுமக்களும் நேரலையாக காண
ஓர் அரிய வாய்ப்பை இஸ்ரோ வழங்கியுள்ளது.
https://quiz.mygov.in/ என்ற இணையதளத்தில் கேட்கப்படும் அறிவியல் சார்ந்த
கேள்விகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போர் இந்த அரிய வாய்ப்பை
பெறலாம் என இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கடைசி தேதி: 25-08-2019
கடைசி தேதி: 25-08-2019


