காஷ்மீரில் வெடித்தது போரட்டம் என்று சில வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோக்கள் உண்மையா?
அட்மின் மீடியா
0
காஷ்மீரில் வெடித்தது போரட்டம் என்று சில வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோக்கள் உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
காஷ்மீர் சம்பந்தமாக சமூகவலைதளங்களில் வலம் வரும் அந்த வீடியோக்கள் அனைத்தும் பழைய வீடியோக்கள் தான்
அந்த சம்பவம் 2018 ம் ஆண்டு நடந்தது
அட்மின் மீடியா - ஆதாரம் 1
அட்மின் மீடியா - ஆதாரம் 2
மேலும் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்
காஷ்மீரில் போராட்டம் வெடித்தது
காஷ்மீரில் உள்ள பள்ளிவாசலில் ஆயுதங்கள் கிடைத்தது
காஷ்மீரில் கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்
போன்ற
பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது அதற்கும்
நமது அட்மின் மீடியா பல மறுப்பு செய்திகள் போட்டுக் கொண்டுதான்
இருக்கின்றன
- காஷ்மீரில் இன்று வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது
- மேலும் கடந்த 5 நாட்களாக காஷ்மீரில் இன்டர்நெட் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது
- அங்கே உள்ள சூழ்நிலை அவ்வாறு இருக்க நமது மக்களோ காஷ்மீரில் அது நடந்தது இது நடந்தது என்று பழைய வீடியோக்களை பழைய போட்டோக்களை எடுத்து தற்சமயம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்
- ஆகையால் அது போன்ற பழைய மேலும் பொய்யான செய்திகளை பகிர வேண்டாம் என்று அட்மின் மீடியாவின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறோம்
- எனவே யாரும் காஷ்மீரில் அது நடந்தது , அதன் வீடியோ, இது நடந்தது இதன் வீடியோ என்று உண்மை தெரியாமல் எதையும் ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
