Breaking News

புழல் ஏரி சீரமைப்பு இறுதி கட்ட பணியில் தன்னார்வலர்கள்...

அட்மின் மீடியா
0

அட்மின் மீடியாவின் அன்பான வேண்டுகோள் முயன்றால் முடியாது என்று ஒன்று இல்லை எனவே வரும் ஞாயிற்றுகிழமை நீங்களும் கலந்து கொள்ளுங்கள்




சோழவரம்  ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் வரும் பேபி கால்வாய் பகுதியினை  தன்னார்வலர்களுடன் சுற்றுவட்டார பொதுமக்கள், தன்னார்வ இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து புழல் ஏரியினை சீரமைத்து வருகின்றார்கள்



அவர்கள் வாரத்தில் கிடைக்கும் ஒருநாள் விடுமுறையையும்  சமூக பணியில் ஈடுபடும் இவர்கள் இதுவரை 4 கட்ட பணிகளை முடித்துள்ளார்கள் இறுதி கட்டமாக  வரும்  ஞாயிற்றுகிழமை 11.08.2019 அன்று இறுதி கட்ட பணிகள் துவங்க உள்ளதாகவும்  அதில் பங்கு பெற ஆர்வமுடையவர்கள் கலந்து கொள்லலாம் என்று மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், மகளிர் குழுக்கள், மொதுமக்கள், இளைஞர்கள், என அனைவரும் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்கள்




எந்த வித அரசியல்கட்சியும் இல்லாமல், எந்த வித அமைப்பும் இல்லாமல், முற்றிலும் சமுதாய நோக்கத்துடன் செயல் படும் அனைத்து தன்னார்வலர்களும் செய்யும் மகத்தான பணி இது, அவர்களுக்கு நீங்களும் கை கொடுக்கலாம், நீங்களும் பங்கு பெற விரும்பினால் கீழ் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுங்கள். மேலும் மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டுள்ளது



எதிர் வரும் 11.08.2019   ஞாயிற்றுகிழமை அன்று புழல் ஏரியை தூய்மை படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது


நாளைய தலைமுறைக்காக!!

இன்றைய தலைமுறையினர் கை கோர்க்க வாருங்கள் !

சேர்ந்து செய்வோம் வாருங்கள்!!


இடம்: செங்குன்றம் திருவள்ளூர் சாலை, ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில், புழல் ஏரி உட்புறம்
 

நேரம்காலை 6.00 மணி





தொடர்புக்கு
 

9362222786



6383639334



9884877507

முடிந்தால் மற்றவர்களூக்கு ஷேர் செய்யுங்கள்


Give Us Your Feedback