இறுதி கட்டத்தை எட்டியுள்ள புழல் ஏரி சீரமைப்பு
சென்னை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இதுவரை விளங்கி வந்த புழல் ஏரிக்கு முக்கியமாக சோழவரம் ஏரியில் இருந்து தான் நீர் வரும் அதன் வழித்தடதிற்க்கு பேபி கால்வாய் பகுதி பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைகாடாக இருந்தது
இதனை சீரமைக்க அப்பகுதியினை சேர்ந்த தன்னார்வலர்கள்எதிர் வரும் மழைகாலத்திற்க்குள் அந்த நீர் வரும் பேபிகால்வாய் பகுதியினை சீரமைக்க அரசிடம் உரிய அனுமதி பெற்று கடந்த 4 வாரமாக அவர்கள் சீரமைத்து வந்தார்கள்.
மேலும் அதன் 5 ம் கட்ட சீரமைப்பு பணி இன்று 11.08.2019 இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மணி வரை அவர்கள் புழல் ஏரியை தூய்மைபடுத்த துவங்கினார்கள்
இந்நிகழ்வில் இன்று இராஜ லட்சுமி கல்லூரியை சேர்ந்த சுமார் 120 மாணவ மாணவிகள் பங்கு பெற்றார்கள்
மேலும் சென்னையை சேர்ந்த வேலம்மாள் பள்ளியினை சேர்ந்த சுமார் 50 மாணவ மாணவிகள் பங்கு பெற்றார்கள்
அதே போல் லயன்ஸ் கிளப்பை சேர்ந்தவர்களும், மக்கள் பாதை அமைப்பை சேர்ந்தவர்களும் பெரும்திரளாக கலந்து கோண்டார்கள்
இன்றைய நிகழ்வில் சுமார் 350 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புழல் ஏரியை சுத்தம் செய்தார்கள் இதுவரை சுமார் 10 டன் குப்பைகள் அகற்றியுள்ள இவர்கள் பேபிகால்வாய்வாயின் மொத்த இடத்தின் 4.2 கிலோமீட்டர் வரை சீரமத்து உள்ளார்கள்
எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி மக்கள் நலனிற்க்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் போற்றும் சமூக பணி செய்யும் இவர்களது பணிக்கு அட்மின் மீடியாவின் வாழ்த்துக்கள்
மேலும் சீரமைப்பு பணிகள் அடுத்த வாரம் 18.08.19 அன்றும் தொடரும் கலந்து கொள்ள விரும்புபவர்கள் புழல் ஏரி சீரமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் களின் அலைபேசி எண்னில் தொடர்பு கொள்ளவும்
சமீர் 9362222786
மணி 9884878507
பிரவீன் 6383639334







Podhu sevaiyil Ellorum idupadavendum
பதிலளிநீக்கு