கனடாவில் விமானநிலையத்தை சூறையாடிய சூறாவளி வீடியோ காட்சி ? உண்மையா
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டொரொண்டோ, கனடாவில் உள்ள சூறாவளி, விமானநிலையத்தை சூறையாடிய காட்சி . சீனாவின் தேசிய புவியியல் இதழ் இந்த வீடியோவை வாங்குவதற்கு $ 1 மில்லியன் செலவழித்துள்ளது. பார்க்கும் வாய்ப்பை இழக்காதீர்கள்! வீடியோ காலம்: 4 நிமிடங்கள் மற்றும் 10 விநாடிகள் ,என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையில் நடந்தது இல்லை அது ஓர் சினிமா காட்சி என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
அந்த வீடியோவில் உள்ளது போல் ஒரு சம்பவம் உலகில் எங்கும் நடக்க வில்லை.
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ காட்சி INTO THE STORM என்னும் சினிமா படத்தில் வரும் ஒரு காட்சி ஆகும்
அந்த திரைப்படம் 2014ம் ஆண்டில் வெளிவந்தது ஆகும்
அந்த திரைப்படத்திற்க்காக உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் வீடியோ காட்சி தான் அது
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம் 2
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
