மனித நேயம் பேணுவோம்.
அட்மின் மீடியா
0
மரணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் நிகழும் என்பதில் எந்த மதம், சிந்தனை, கொள்கை கொண்டவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லாத ஒன்றாகும்.
அதே நேரத்தில் மரண செய்தி என்பது இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் அவரை சார்ந்தவர்க்கும் பெரும் இழப்பும், துக்க தருணமும் ஆகும்.
எதிரியாக இருந்தாலும் அவனின் மரணத்தை கண்டு மகிழ்ச்சி அடைய மார்க்கம் அனுமதி வழங்கியது இல்லை.
ஆனால் இன்று சமூக ஊடங்களில் தமக்கு பிடிகாதவர்கள் இறந்துவிட்டால் மரணித்தவரின் துக்க நேரத்தில் அவரை பற்றி வசைபாடுவதன் மூலம் பெரும் வெறுப்பு செயலை நம்மில் பலர் செய்து வருகிறோம்.
இது கண்டிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
இதோ நபியவர்களின் தோழர்கள் எப்படி பக்குவமானவர்களாக திகழ்ந்தார்கள்
என்பதற்கு உதாரணத்தை ஹதீஸ் விளக்குகிறது.
1312. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா அறிவித்தார்.
ஸஹ்ல் இப்னு ஹுனைஃபு(ரலி), கைஸ் இப்னு ஸஅத்(ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள். அப்போது அவர்களிடம் 'இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?' எனக்கேட்கப்பட்டது. அதற்கு அவ்விருவரும், 'நபி(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மனிதரில்லையா?' எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.
சிந்திப்போம்!
கட்டுரை ஆக்கம் : யூசுப்
