Breaking News

பயங்கரவாதிகள் புகைப்படம் காவல்துறை வெளியிட்டார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு


கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் மீடியாக்களில்  வெளியானது. 


ஆனால் இது போல் புகைபடங்களை நாங்கள் வெளியிடவில்லை என போலீசார் மறுத்துள்ளனர். 


லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை, தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது. 



இந்நிலையில் கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படங்களை  மீடியாக்கள்வெளியிட்டது

தீவிரவாதிகளின் என வெளியான 2 புகைப்படங்களும் தவறானது எனத் போலிஸார் தெரிவித்த நிலையில்,. மத்திய உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback