லிஃப்டிற்குள் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய சிறுமி
அட்மின் மீடியா
2
லிஃப்டிற்குள் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய சிறுமி
இந்த சம்பவம் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்தது
லிஃப்டிற்குள் 3 சிறுவர்கள் உள்ளே நுழைகின்றனர்.
அதில் ஒரு சிறுவன் தன் கழுத்தில் கயிறை சுற்றியபடி லிஃப்டிற்குள் வந்துள்ளான்
நீளமான அந்த கயிறு பாதி லிஃப்டிற்குள்ளும் பாதி வெளியே இருந்துள்ளது.
அந்த கயிரை 3 சிறுவர்களும் கவனிக்காத நிலையில் லிஃப்ட் கீழ்நோக்கி சென்றுள்ளது.
அப்போது சிறுவன் கழுத்தில் இருந்த கயிற்றின் மற்றோரு பக்கம் மேல்தளத்திலேயே சிக்கியுள்ளது.
இதனால் அந்த சிறுவன் மேலே தூக்கப்பட்டு, கழுத்தில் கட்டப்பட்ட கயிறுடன் தொங்கியுள்ளான்.
உடனடியாக அந்த சிறுமி, சாதுர்யமாக சிறுவனை தூக்கியவாறே லிஃப்டின் அவசர மணியை அழுத்தினார்.
உடனடியாக லிஃப்ட் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டது.
இதனால் சிறுவன் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.
சிறுமி தனது சகோதரனை காப்பாற்றிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

God is great.god bless that girl
பதிலளிநீக்குஉண்மையில் பாராட்ட கூடியது..
பதிலளிநீக்கு