Breaking News

4 ம் கட்ட புழல் ஏரி சீரமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் உடன் நடிகர் தாமு

அட்மின் மீடியா
0
4 ம் கட்டமாக புழல் ஏரியை சீரமைத்த தன்னார்வலர்கள்




சென்னை மக்களின்  முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் முக்கிய நீர் வரும் பேபி கால்வாய் பகுதி பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைகாடாக இருந்தது



எதிர் வரும் மழைகாலத்திற்க்குள் இந்த பகுதியினை சீரமைக்க சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் அரசிடம் உரிய அனுமதி பெற்று  கடந்த வாரம் வரை இதுவரை 3 கட்டமாக பணிகள் முடித்தவர்கள்
4 ம் கட்ட பணி இன்று 04.08.2019 காலை 6 மணி முதல் 10 மணி வரை தன்னார்வலர்கள் புழல் ஏரியை தூய்மைபடுத்த துவங்கினார்கள் 

 

இந்நிகழ்வில் இன்று தமிழ் திரைபட பிரபல நடிகர் தாமு பங்கேற்றார், மேலும் மக்களோடு மக்களாக அவரும் குப்பைகளை அள்ளி புழல் ஏரியை சீரமைக்கும் பணி செய்தார.



மேலும் சென்னையை சேர்ந்த CHILDREN'S PARADISE MAT HR SEC SCHOOL மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள், அதே போல்



அதே போல் சென்னை கூனி மேடு பகுதியை சேர்ந்த GOOD WORD PUBLIC SCHOOL மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள், 



இன்றைய நிகழ்வில் சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புழல் ஏரியை சுத்தம் செய்தார்கள் இன்றுவரை சுமார் 7 டன் குப்பைகள் அகற்றியுள்ள இவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் வரை பேபிகால்வாய் பகுதியை சீரமத்து உள்ளார்கள் மக்கள் போற்றும் சமூக பணி செய்யும் இவர்களது பனிக்கு அட்மின் மீடியாவின் வாழ்த்துக்கள்


மேலும் மீண்டும் அடுத்த வாரம் ஞாயிற்றுகிழமை 11.08.2019 அன்று 5ம் கட்ட பணிகள் துவங்க உள்ளதாகவும்  அதில் பங்கு பெற ஆர்வமுடையவர்கள் கலந்து கொள்லலாம் என்று தெரிவித்தார்கள்


மேலும் புழல் ஏரியை  தூய்மை படுத்த  நீங்களும் பங்கு பெறலாம்

எந்த வித அரசியல்கட்சியும் இல்லாமல், எந்த வித அமைப்பும் இல்லாமல், முற்றிலும் சமுதாய நோக்கத்துடன் செயல் படும் அனைத்து தன்னார்வலர்களும் செய்யும் மகத்தான பணி இது, அவர்களுக்கு நீங்களும் கை கொடுக்கலாம்


எதிர் வரும் 11.08.2019   ஞாயிற்றுகிழமை அன்று புழல் ஏரியை தூய்மை படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது

நாளைய தலைமுறைக்காக!! 

இன்றைய தலைமுறையினர் கை கோர்க்க வாருங்கள்

சேர்ந்து செய்வோம் வாருங்கள்!!



இடம்: செங்குன்றம் திருவள்ளூர் சாலை, ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில், புழல் ஏரி உட்புறம்
நேரம்காலை 6.00 மணி


தொடர்புக்கு
9362222786

6383639334

9884877507


மேலும் இந்த செய்தி பற்றி கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸ்ஸில் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Give Us Your Feedback