Breaking News

அமேசான் காட்டில் என்ன நடக்குது? இது ஒரு சர்வதேசப் பிரச்னையா?

அட்மின் மீடியா
0
அமேசான் காட்டில் என்ன நடக்குது?  இது ஒரு சர்வதேசப் பிரச்னையா?

அமேசான் என்றால் படகுகளை அழிக்க வல்லவன் என்று அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும்மொழியில் அர்த்தம்




இங்குள்ள நதியின் செழிப்பால்தான் இக்காடுகள் செழித்து வளர்ந்துள்ளன. இங்கு மழை மிக அதிகம் பெய்வதால் மழைக்காடுகள் என்று அழைப்பார்கள்.

அமேசானாஸ் என்று அழைக்கப்படும் இப்பகுதி 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் படர்ந்து விரிந்துள்ளது. 

அமேசன் மழைக்காடு பிரேசில், பிரன்ச் கயானா, சுரினம், ஈக்குவடோர், பொலிவியா, பெரு,கொலம்பியா,வெனிசுவேலா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.

உலகின் உயிர் இனங்கள் மூன்றின் ஒரு பங்கு அமேசான் காடுகளில்தான் வசிக்கின்றன. ஆபத்தான உயிர் இனங்கள் இங்கு பல உள்ளன. 

பறவைகளில் ஐந்தில் ஒரு பகுதி இந்தக் காட்டில்தான் உள்ளன. மேலும் இங்கு பாம்புகள் ஏராளம், அனகொண்டா போன்ற பாம்பு வகை அதிகம் காணப்படும் இடமிது. நிலத்தில் மட்டுமல்லாமல் நீரிலும் வாழும் இயல்புடையது இந்த அனகொண்டா வகைப் பாம்புகள்.

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் உலக அளவில் பிரபலமானவை. இங்கு உலகில் வேறு எங்கிலும் இல்லாத அரிய மரங்கள் காணப்படுவதோடு, அரிய வகை வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றன

கிட்டத்தட்ட 9 லட்சம் பழங்குடி மக்கள் பிரேசிலில் உள்ள அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்கிறார்கள்.

மேலும் மிக முக்கியமாக் பூமியில் கிடைக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவீதம் அமேசான் காடுகளில் இருந்தே கிடைப்பதால் அமேசான்  காடுகள் ‘பூமியின் நுரையீரல்’ என்று வர்ணிக்கப்படுகிறது.

இப்படி பட்ட வன செழிப்புள்ள பகுதியில் தான் கடந்த 18 நாட்களாக தீ அனையாமல் தொடந்து 3000 கிலோ மீட்டர் வரை எரிந்து கொண்டு இருக்கின்றது 







அமேசான் காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கை தான். ஜூலை-அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் இயற்கையாகவே இங்கு காட்டுத்தீ உருவாகும்.

அதாவது மின்னல் தாக்கி மரங்களில் தீப்பிடித்து அதன் மூலம் காட்டுத்தீ பற்றி எரியும். 

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அமேசான் காடுகளில் ஆண்டு தோறும் தீப்பற்றி எரிந்து வருகிறது. 

ஆனால் இந்த ஆண்டு காட்டுத்தீயானது இதுவரை இல்லாத வகையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் எப்போதும் நிகழாத வகையில் அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.

இதில் அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலியாகி இருக்கலாம் என்றும், பல லட்சம் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி இருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.





2018-ம் ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்து உள்ளது.


பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் சுமார் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 90 சதவீத காட்டுத்தீகள் இன்னும் அணையவில்லை என்றும், மேலும் நாளுக்கு நாள் புதிதாக காட்டுத்தீ ஏற்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அதுமட்டும் இன்றி சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசான் காடுகள் பற்றியும் தீ குறித்தும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதிக்க அந்நாட்டின் அதிபர் மெக்ரான் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த காட்டு தீ விரைவில் அனைய வேண்டும் என அனைவரும் பிராத்திப்போம்

# pray for amazon

Give Us Your Feedback