Breaking News

குழந்தையை ஆட்டோவில் மறந்து விட்டு போன அம்மா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0



தற்போது சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ ; 

நாம் எல்லோம் ஆட்டோவில் ஏதாவது குடை, பை, புக், பர்ஸ் போன்றவைகளைதான் மறப்போம் ஆனால்  



வட மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் ஆட்டோவில் பயணம் செய்து உள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கி அவர் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு காதில் போன் வைத்தவாறே சந்தேகத்தை கேட்டுக்கொண்டு பேசிக்கொண்டு தனியாக இறங்கி செல்ல ஆரம்பித்து விட்டார்.



ஆட்டோ ஓட்டுநர் குழந்தையை தூக்கிக்கொண்டு அந்தப்பெண் பின்னாடியே மேடம் மேடம் என சப்தமாக கத்திக்கொண்டு அவர் அருகே சென்று குழந்தையை கொடுக்கிறார்.



அப்போதுதான் அந்தப் பெண் திரும்பிப் பார்த்து ஓடி வந்து குழந்தையை பெற்றுக் கொள்கிறார். அதுவரையிலும் அவர் ஆர்வமாக போனில் பேசிக்கொண்டு செல்கின்றார் என்று ஓர் வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
 
அந்த வீடியோ உங்களுக்காக

 

https://www.youtube.com/watch?v=0fXNgLyknV0

அந்த வீடியோ உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது


அந்த வீடியோ உண்மையில்லை 


இந்த வீடியோ ஏதோ படமோ அல்லது நாடகத்திற்காக ஷூட்டிங் எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட சீன் ஆகும்.  

அட்மின் மீடியா ஆதாரம் 1 



https://www.youtube.com/watch?v=rerBaHfcnUg&feature=youtu.be


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback