வேலூரில் நடந்த இஸ்லாமிய சாதிக் கொடுமை ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கபட்ட இஸ்லாமியர் சடலம்: வேலூரில் நடந்த இஸ்லாமிய சாதிக் கொடுமை
என்று ஒரு செய்தி பரவலாக சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்காக பாலாற்றையொட்டி சுடுகாடு அமைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்ட நிலையில், பாலாற்றின் இருபுறமும் உள்ள விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் உயர் சாதியினர் ஆற்றுக்கு செல்லும் வழியை வேலி அமைத்து அடைத்துவிட்டார்கள்
இதனால் அந்த பக்கமாக சுடுகாடு செல்லமுடியாத நிலை இருப்பதால் கடந்த 2 ஆண்டாக அந்த பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கி தான் அடக்கம் செய்கின்றார்கள்
பாலத்தில் கயிறுகட்டி பிநம் இறக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது
அதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தர அந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு இட்டுள்ளது
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம் 2
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
