Breaking News

பள்ளிவாசலில் நடந்த போஸ்ட்மார்ட்டம் மனித நேயமிக்க இஸ்லாமிய மார்க்கம்

அட்மின் மீடியா
0

பள்ளிவாசலில் நடந்த போஸ்ட்மார்ட்டம்  மனித நேயமிக்க இஸ்லாமிய மார்க்கம் 


கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முஸ்லீம்கள் இடம் அளித்துள்ளனர். 

மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை நிலச்சரிவில் 31 உடல்கள் மீட்கப்பட்டது . ஆனால் பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து மிகவும் மோசமாக இருந்தது. அதனால் போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு கூட கொண்டு செல்ல முடியவில்லை. 

கடந்த 10-ம் தேதி ஒரு உடல் கிடைத்தது. மிகவும் உருக்குலைந்த அந்த உடலை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முடியவில்லை. அங்கேயே வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யலாம் என்றால் மழை வேறு கொட்டி கொண்டிருந்தது போஸ்ட் மார்ட்டம் செய்ய வேற இடமும் இல்லை! 

அருகில் இருந்த மஸ்ஜித்துல் முஜாகிதீன் பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளி நிர்வாகத்திடம்  போஸ்ட்மார்ட்டம் செய்ய ஏதாவது இடம் பக்கத்தில் கிடைக்குமா என்று போலிஸார் கேட்டுள்ளனர். 

அதற்கு பள்ளி நிர்வாகத்தினர் "என்ன இப்படி கேட்டுட்டீங்க.. நம்ம பள்ளிவாசல் இருக்கும்போது, வேற இடம் ஏன் தேடி அலையறீங்க? கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னார்கள்

பள்ளிவாசல் உள்ளே  ஒரு மேஜையை இழுத்து போட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய வசதி செய்து தந்தனர். உடனே 2 உடல்கள் இங்குவைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டன. 

ஆனால் நாளுக்கு நாள் புதைந்த உடல்கள் கிடைத்து கொண்டே இருக்கவும், அதற்கு இடம் இல்லாமல் போனது. உடனே பெண்கள் தொழுகை நடத்தும் இடத்தையும் விட்டு கொடுத்தனர். 

இதுவரைக்கும் 30 பேரின் உடல்கள் இந்த பள்ளிவாசலில் வைத்துதான் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது

Give Us Your Feedback