Breaking News

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கயவனுக்கு தூக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

அட்மின் மீடியா
1
கோவை ரங்கே கவுடர் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிகளின் செல்ல மகள் முஸ்கின் (வயது 10). அருமை மகன் ரித்திக் (7).



கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக புறப்பட்டு வந்தனர்.


அவர்களை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த டிரைவர் மோகனகிருஷ்ணன் என்ற மோகன்ராஜ் தனது திட்டப்படி கால் டாக்சியில் அவர்களை கடத்திச் சென்றான்.


திட்டத்தை அரங்கேற்ற பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோகரனையும் சேர்த்துக் கொண்டான்.


உடுமலையை அடுத்த தீபாலப்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர்கள் சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர்.


எங்கே நாம் செய்த தவறு வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முஸ்கின், ரித்திக்கை கால்வாயில் தள்ளி கொன்றனர்.


இந்த கொடூரங்களை செய்த மோகன்ராஜ், மனோகரனை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.


கொலை நடந்தது எப்படி என்று விசாரிக்க 2010 நவம்பர் 9-ந்தேதி கோவையில் இருந்து வேனில் அழைத்து சென்றனர்.


வேன் செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றபோது போலீசை தாக்கிவிட்டு மோகன்ராஜ் தப்ப முயன்றான்.


அவனை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.


இதைத் தொடர்ந்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை  கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது.


2012 ம் ஆண்டு மனோகரனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தார்.


தூக்குதண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற 
மனோகரனுக்கு தூக்கு தண்டனையை, மகளிர் நீதிமன்றம் விதித்தது சரியானது தான். எனவே அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனோகர னுக்கு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது


ஆனால் மனோகரன் இந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
தூக்கு தண்டனை
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக உத்தரவிட்டார்.

Give Us Your Feedback

1 Comments

  1. அருமையான தீர்ப்பு! சட்டம் கடுமையானது என்பதை குற்றவாளிகள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் ! தொடர்ந்து வழக்கை தடயங்களுடன் நடத்திய சம்பந்தம் பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் உட்பட அனைவரையும் பாராட்டுகிறேன்

    பதிலளிநீக்கு