காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 9 நாட்கள் அரசு விடுமுறை, பள்ளி கல்லூரிகளும் விடுமுறை
அட்மின் மீடியா
0
காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய 3 தேதிகள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி, கல்லுரிகளுக்கு ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய 3 தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனத்திற்காக பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே
இடையில் உள்ள ஆகஸ்ட் 12 பக்ரீத் மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் மற்றும் ஆக்ஸ்ட்
17சனிக்கிழமை, ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைக்கும் விடுமுறையாகும்.
எனவே காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி
சனிக்கிழமை முதல் அடுத்த வாரம் ஆகஸ்ட் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 9 நாள்கள் தொடர்
விடுமுறை கிடைத்துள்ளது.
அத்தி வரதர் விழா வரும் ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை நிறைவு
பெறுகிறது. அதன்பிறகு திங்கள்கிழமையான ஆகஸ்ட் 19ம் தேதி தான் காஞ்சிபுரம் நகரத்தில்
பள்ளிகள் இயங்கபோகின்றன
