Breaking News

இந்தியா கேட்டில் 62220 இஸ்லாமியர் பெயர்கள் உண்மையா ?

அட்மின் மீடியா
0




இந்தியா கேட் போர் நினைவு சின்னத்தில் மொத்தம் 95,300 ராணுவ வீரர்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 61,495 பெயர் இஸ்லாமியர்களுடையது, என்று பலரும் ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்.



மேலும் இந்தியா கேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர்களில் சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் பெயர் பட்டியல் 62220 பெயர்கள் இஸ்லாமியர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்று பலரும் ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்.



இந்த தகவல் உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது



இந்த தகவல் பொய்யானது ஆகும்



யாரும் நம்பவேண்டாம்



யாரும் யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள்

                    

அப்படியானல் உண்மை என்ன ? இந்தியா கேட் பற்றிய வரலாற்று உண்மை என்ன என ஆய்வு செய்தோம்.



டெல்லி இந்தியா கேட்டில் மட்டும் பதியப்பட்டுள்ள பெயர்கள் 13516. இதுபோல் டெல்லியில் நான்கு நினைவிடங்கள் உள்ளது. அவைகளில் மொத்தம் 40240 பெயர்கள் உள்ளது






மேலும் 43 மீட்டர் உயர இந்தியா கேட், முதல் உலகப் போரில் உயிர் நீத்த 70 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது.  

இந்த நினைவகத்தில் 1919ம் ஆண்டு நடந்த வடமேற்கு எல்லையில் நடந்த ஆப்கான் போரில் உயிரிழந்த 13,516 பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.”

இதில் உள்ள 13,516 பெயர்களும் காமன்வெல்த் போர் நினைவு சின்னம் கமிஷன் இணையதளத்தில் உள்ளது  


அந்த இணைய தளத்தில் ஒவ்வொருவரின் பெயர், அவர் வகித்த பதவி, என்ற அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன


அட்மின் மீடியா ஆதாரம் 1




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback