Breaking News

வயநாட்டில் நிலச்சரிவு 40 பேர் மாயம், நேரடி வீடியோ காட்சிகள்

அட்மின் மீடியா
0

கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.



ஆனால் இந்த ஆண்டு மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரமாக  கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கேரளாவின் வட பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து நீடிக்கிறது.
இதன் காரணமாக வயநாடு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்ணில் புதைந்து சுல்தான்பத்தேரி பகுதியைச் சேர்ந்த கரீம் என்பவர் பரிதாபமாக இறந்து போனார்.
அதே பகுதியைச் சேர்ந்த பிரதீஷ் என்பவரின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கி அவர் பலியாகி உள்ளார்.

நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேப்பாடி என்னுமிடத்தில் 40 பேர் நிலசரிவில் சிக்கி காணாமல் போனதாக தகவல்கள் வருகிறது.

மேலும் நிலசரிவின் வீடியோ காட்சி

Give Us Your Feedback