பிச்சை எடுப்பவரின் பையில் 1.8 கோடியா ? உண்மை என்ன ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோவில் சிலர் அமர்ந்து பணம் எண்ணி கொண்டு இருக்கின்றாரகள் அந்த வீடியோவுடன் அதனுடன் கர்நாடகாவில் மரணமடைந்த ஒரு பிச்சைக்காரரின் பையில் இருந்த தொகை அங்கேயே காவல்துறையினரால் எண்ணிக் கணக்கிடப்பட்டது. அதிகம் ஒன்றுமில்லை…..ரூ. ஒரு கோடியே எண்பத்தாறு லட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து முன்னூற்று அறுபத்து நான்கு மட்டும்.(ரூ1,86,43,364/-)!!! என்ற செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது\
ஆம் அந்த செய்தி உண்மைதான் பிச்சைகாரர் இறந்தது உண்மை, மேலும் அந்த பிச்சைகாரர் ஒரு பெண், மேலும் அந்த பிச்சைகாரரிடம் பணம் இருந்தது உண்மை, ஆனால் ஒரு கோடி என்பது பொய்யான செய்தி
அந்த வீடியோவில் 1.8 கோடி இருக்க வாய்ப்பில்லை. அதில் ரூபாய் 10, 20, 50, 100 எண்ணிக்கை கொண்ட நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மட்டுமே அதிகம் உள்ளன. அதில் உள்ள பணம் லட்சங்களில் வேண்டுமானால் இருக்கலாம். 1.80 கோடி அளவுக்கு அங்கு பணம் குவிந்து இல்லை.
மேலும் இந்த ச்மபவம் 24.07.2016 நடந்தது
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி
