Breaking News

ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி எரிக்கபட்ட 15 வயது சிறுவன் முகமது காலித் வீடியோவா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
1
ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி எண்ணெய் ஊற்றி எரிக்கபட்ட 15 வயது சிறுவன் முகமது காலித்  இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டான்... சஹீத்_அஃக்லாக், ஜுனைத், தப்ரேஷ் அன்சாரி வரிசையில் இந்த சிறுவனும் அநியாயமாக கொல்லபட்டிருக்கிறான்... இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறார்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மையில்லை


யாரும் நம்ப வேண்டாம்
யாரும் யாருக்கும் ஷேர் செய்யவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன


இந்த பரபரப்பான சம்பவம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்தது.
தனக்கு தானே தீவைத்த இளைஞன் பெயர் பாபுலால் சைனி , குடா கிராமத்தில் உள்ள வனத்துறை நிலத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமைப்பு செய்வதாக தகவல்கள் வந்ததையொட்டி ஆக்கிரமிப்பு அகற்றி கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுக்க வனத்துறையின் குழு வந்தது. இந்த நேரத்தில் வனத்துறையின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து பாபுலால் சைனி என்ற இளைஞன் தன் மீது எண்ணெயை ஊற்றி தனக்கு தானே தீ வைத்தான்.  


இந்த சம்பவத்தைப் பார்த்த காவல்துறையினரும் அங்கிருந்தவர்களும் திகைத்துப் போனார்கள். 


எரிந்த இளைஞனின் தீயை அணைப்பதற்கு பதிலாக, காவல்துறையினர் தப்பித்து தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கத் தொடங்கினர். 

இந்த சம்பவத்தில், இளைஞர்கள் முற்றிலுமாக எரிக்கப்பட்டு  காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இவர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையிலிருந்து முதலுதவி பெற்ற பின்னர் ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் உள்ளார்


ஆதாரம் 1




ஆதாரம் 2




அந்த சம்பவத்தை யாரோ வேண்டும் என்றே சிறுவன் முகமத் காலித் வீடியோ என்று வதந்தி பரப்பிகின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


உங்களுக்கு யாரேனும் இந்த செய்தி அனுப்பினால் இந்த செய்தி பொய் என்று சொல்லுங்கள்


இந்த செய்தி பற்றி உங்கள் கருத்தை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறவும்

Give Us Your Feedback

1 Comments